06 December, 2006

9. 'கார்த்திக்'குகள் பலவிதம்

'கார்த்திக்'குகள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம்

ஒரு குட்டி அறிவிப்பு:
இந்த பதிவு யாரையும் கேலி செய்வதற்காகவோ, புண்படுத்துவதற்காகவோ இல்லை. பள்ளி, கல்லூரிப் பருவ நாட்களில் நாம் எப்படியெல்லாம் சுவாரஸ்யமாக வாழ்ந்தோம் என்பதின் ஒரு சிறு பகுதி.

--------------

ஒவ்வொருவருக்கும் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் ஒரே பெயர் கொண்ட பல நண்பர்கள் இருந்திருப்பார்கள். பொதுவாகவே சில பெயர்கள் பரவலாக இருக்கும், அவை சற்றே பழைய பெயர்களோ அல்லது புதிய/மாடர்ன் பெயர்களோ, அவை எல்லோருக்கும் பிடித்தமானவையாகவோ அல்லது அழைப்பதற்கு எளிதாகவோ இருக்கும். (பழைய: முருகன், ராஜா, கண்ணன்..., புதிய/மாடர்ன்: சதீஷ், அஜய், அருண்....).
..
ஒரே பெயருடைய நண்பர்களை வித்தியாசப்படுத்திக் கூப்பிட அவர்களை பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவோம் (ஆமாம் பெரிய பட்டம், ஆக்ஸ்போர்ட் ஸ்கூல் பட்டம்...). நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது இரண்டு குமரேசன்கள் இருந்தார்கள். ஒருவன் 'குட்டை' குமரேசு, இன்னொருவன் நெட்டை குமரேசு, கல்லூரியில் ஒருவர் 'கும்மாண்டி' குமரேசு. இவர்களை இவர்களின் சொந்த பெயர் சொல்லி அழைப்பதை விட பட்டப்பெயர் சொல்லி அழைக்கும்போது இன்னும் நெருக்கமாகவே உணர்ந்திருக்கிறோம்.
..
இப்படி எனக்கு கார்த்திக் என்ற பெயரில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு எப்படி அந்த பட்டப்பெயர் வந்தது என்று கூட எனக்குத் தெரியாது.

பள்ளியில்:
'விரிச்சு' கார்த்தி - (Virtue-னா என்னடா என்று அர்த்தம் கேட்டான், மருவி விரிச்சு என்றாகிவிட்டது)
'யமகா' கார்த்தி - (பள்ளிப்பருவத்தில் Yamaha RX 100 வைத்திருந்த ஒரே நண்பன்)
'பௌலிங்' கார்த்தி - (கரெக்ட்டாக first slip ல் இருப்பவனுக்கு பௌலிங் போடுவான் :-))
..
கல்லூரியில்:
'சைக்கு' கார்த்தி - (சைக்கோ என்பது நாளடைவில் இப்படி ஆகிவிட்டது)
'மாமா' கார்த்தி - (இனிஷியல் M.A.M.A. என்றிருப்பது ஒரு குறையா)
'மண்டை' கார்த்தி - (நல்லா படிக்கிற மண்டையன்)
'வணக்கம்' கார்த்தி - (யாரைப் பார்த்தாலும் வணக்கம் சொல்வார்)
'ரம்பா' கார்த்தி - (கொஞ்சம் குண்டா, தொடை பெருசா இருந்திரக்கூடாதே :-p)
'பெருசு' கார்த்தி - (கொஞ்சம் வயதில் பெரியவர்)
'போண்டா' கார்த்தி - (எதற்கும் வாயை திறக்கவே மாட்டான், "ஏண்டா வாயில என்னா போண்டாவா வச்சிருக்க" என்ற நாளில் இருந்து)
'கார்' கார்த்தி - (கார் வைத்திருந்த நண்பன்)
'டுபுக்கு' கார்த்தி - (இதற்கு பெயர்க்காரணம் வேறா)
.
சிலரை பெயர் மற்றும் பட்டத்தோடு சேர்த்து சொன்னால்தான் தெரியும். சிலருக்கு பட்டம் தேவையில்லை பெயர் மட்டும் போதும். 'வணக்கம்' கார்த்தி என்று சொன்னால்தான் அவன் தான் இவன் என்று தெரியும். ஆனால் 'கில்மா' கிரி-யை 'கில்மா' என்று சொன்னாலே தெரியும்.
.
இவனிடம் ஒரு முறை கேட்டேன் "ஏண்டா! எல்லாரும் உன்ன கில்மா கிரி, கில்மா கிரின்னு கூப்பிடுறாங்களே, கிரி-ங்கறது உன் பேரு, கில்மாங்கிறது நீ படிச்சு வாங்குன பட்டமாடா?" இதற்கு அவன் பார்த்தானே ஒரு பார்வை இன்னும் மனதில் இருக்கிறது.
.
ஆனாலும் எனக்குத் தெரிந்து இன்றுவரை ஒருவர் கூட என்னை இந்த பேர் சொல்லி அழைக்காதே என்று சொன்னதில்லை. உண்மையில் பெயரில் என்ன இருக்கிறது, பெயர் வெறும் பெயர்தானே.
.
உங்களுக்கும் இதே போல் 'பட்டம்' பெற்ற நண்பர்கள் இருக்கிறார்களா?

2 comments:

Anonymous said...

// கிரி-ங்கறது உன் பேரு, கில்மாங்கிறது நீ படிச்சு வாங்குன பட்டமாடா?

:-)

கார்த்திக் மட்டுமில்ல ராஜா, சரவணன், செந்தில் போன்ற பெயர்களிலும் என்னோட School daysல் ஒவ்வொரு classலும் குறைந்தது மூன்று பேராவது இருந்திருக்கிறார்கள். பாதி பேரின் பட்டப்பெயர்தான் இன்னும் நினைவிலிருக்கிறது.

hmm ஞாபகம் வருதே !!! ஞாபகம் வருதே!!

ஷோபன் said...

வாங்க விக்கி, வருகைக்கு நன்றி.