22 December, 2006

14. இந்த விசயம் கடவுளுக்குத் தெரியுமா?

ராமரும் பாபரும்

எஞ்சாமி பெருசா
ஓஞ்சாமி பெருசா
வா பார்த்துப்புடலாம்

முட்டிக் கொண்டன
அறிவிலிகள்
உடைந்தன கோவில்கள்
நொறுங்கியது மசூதிகள்

லேய்...யார்ரா அது
முக்காடு போட்டு போறது
அட நம்ம
ராமரும் பாபரும்
--------------------------------------------
இந்த விசயம் கடவுளுக்குத் தெரியுமா?

கடவுளைப் பார்க்க
கியூ வரிசை

சாதா தரிசனம்
இலவசம்
ஸ்பெசல் தரிசனம்
10 ரூபாய்

ஏனுங்க இந்த விசயம்
கடவுளுக்குத் தெரியுமா?
---------------------------------------------

14 comments:

.:: மை ஃபிரண்ட் ::. @ .:: My Friend ::. said...

ஆஹா. அற்புதம் அற்புதம்..

ரெண்டு ரெண்டு வரிகளை அருமையாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்

நான் said...

வாங்க தோழி,
முதல் வருகைக்கு நன்றி.
நீங்க புகழ்ற அளவுக்கு ஒன்னும் பெருசா இல்லீங்கோ...ஏதோ என்னால முடிஞ்சது. மத்த பதிவுகளையும் படிச்சு உங்க கருத்துக்களை சொன்னீங்கன்னா ரொம்ப சந்தோசப்படுவேனுங்க. அடிக்கடி வாங்க.

சுந்தர் said...

சிம்பிளி ... சுப்பருங்கோ

நான் said...

வாங்க சுந்தர்,
ரொம்ப நன்றிங்க. அடிக்கடி வாங்க, உங்க கருத்துக்களை சொல்லுங்க, இதே போல் உற்சாகப்படுத்துங்க. நாம் நிறைய பரிமாறிக்கொள்ளலாம்.

k@rthik said...

//ஏனுங்க இந்த விசயம்
கடவுளுக்குத் தெரியுமா?//


neththi அடி!

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

நான் said...

வாங்க கார்த்திக்,

வாங்க கார்த்திக்,
வருகைக்கு நன்றி.

அதென்னங்க K4K?

எப்பிடியோ எனக்கு இன்னொரு நண்பர் கார்த்திக் என்ற பெயரில் கிடைத்துவிட்டார். இங்கே பாருங்கள் http://naanengiranaan.blogspot.com/2006/12/blog-post_4777.html

நான் said...

வாங்க மு.கா.,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நிறைந்த சிந்தனையும் குறையாது கிடைக்க பரம்பொருளை வேண்டுகிறேன்.

அடிக்கடி வந்து செல்லுங்கள்.

.:: மை ஃபிரண்ட் ::. @ .:: My Friend ::. said...

// மத்த பதிவுகளையும் படிச்சு உங்க கருத்துக்களை சொன்னீங்கன்னா ரொம்ப சந்தோசப்படுவேனுங்க. அடிக்கடி வாங்க. //

டைம் இல்லாத காரணத்தால் கொஞ்ச நாட்கள் வர முடியவில்லை.. ஆனாலும், இந்த சில நாட்களில் உங்களுடைய எல்லா பதிவுகளையும் படித்து பின்னூட்டம் போட்டுவிடுகிறேன்.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. @ .:: My Friend ::. said...

சமீபத்தில் உங்கள் நட்பு கிடைத்தாலும், அது இன்னும் வளர.. எப்போதும் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2007-ஆம் ஆண்டில் நீங்கள் மென்மேலும் வெற்றியின் சிகரத்தை தொட.. உடல் நலம் குன்றாமலிருக்க.. துன்பங்கள் இல்லாமல் இன்பங்களை மட்டும் அனுபவிக்க.. உங்கள் ப்ளாக் வளர.. என்னுடைய வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
உங்கள் தோழி..
.:: மை ஃபிரண்ட் ::.

நான் said...

என் தோழி,

//டைம் இல்லாத காரணத்தால் கொஞ்ச நாட்கள் வர முடியவில்லை.. ஆனாலும், இந்த சில நாட்களில் உங்களுடைய எல்லா பதிவுகளையும் படித்து பின்னூட்டம் போட்டுவிடுகிறேன்.. ;-) //

ரொம்ப டேங்ஸ்ங்க.

வாழ்துக்களுக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள். :-)

k@rthik said...

hello நான்...

a for apple மாதிரி
k for karthik.. அதான்.,, k4karthik... simplified to k4k... ok va?

கார்த்திக்'குகள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம் பார்த்தேன்.. எனக்கும் எதாவ்து பட்ட பெயர் இருக்கா?

நான் said...

வாங்க K4K,

//a for apple மாதிரி
k for karthik..//
WoW :-),

உக்காந்து யோசிப்பீங்களோ? :-)

k@rthik said...

//உக்காந்து யோசிப்பீங்களோ? :-)//

தானா வருதுங்க... முடியல....