6. உயரே பறக்கும் 'ஈ'
தேசிய விருது பெற்ற 'இயற்கை' திரைப்படத்தின் இயக்குனர் ஜனநாதன் இயக்கிய இரண்டாவது படம். ஒரு சிக்கலான, கீழ் மட்டத்திலிருப்பவர்களுக்கு எளிதில் புரியாத ஒரு விசயத்தை, மிகத் தெளிவாக, மசாலாக் கலவைகளோடு, ஆபாசக் கலப்பின்றி, இரட்டை அர்த்த வசனங்கள் இன்றி எல்லோருக்கும் புரியும் படி கதை சொல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.
கதை, கதைக்களம், அதை சொன்ன விதம் இவற்றிற்காகவே இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்த படத்திற்காக மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்:
1. இப்படிப்பட்ட ஒரு கதையை இந்த மாதிரி எளிமையாகவும் சொல்ல முடியும் என்று காட்டிய இயக்குனர். மிகச்சிறந்த பாத்திரப் படைப்புகள் (ஈ, நெல்லை மணி), இதற்காகவும் தாராளமாக பாராட்டலாம்.
2. இயக்குனரின் மனதில் உள்ளதை அப்படியே திரையில் காட்ட உதவிய ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர்.
3. சினிமாத் துறையில் 'இமேஜ்' என்று சொல்வார்களே, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் 'ஈ'யாக நடித்த ஜீவா மற்றும் நெல்லை மணியாக நடித்த பசுபதி.
இன்னும் நிறைய எழுதலாம், ஆனால் திரையில் பாருங்கள்.கதை, வசனம், இயக்கம்: ஜனனாதன்
திரைக்கதை: கல்யாண கிருஷ்ணன்
ஒளிப்பதிவு: ஏகாம்பரம்
எடிட்டிங்: விஜயன்
இசை: பறீகாந்த் தேவா
கலை: செல்வகுமார்
மேலதிக விபரங்களுக்கு: www.ethefilm.com
2 comments:
படம் நல்ல படம்ங்க. ஆனா வரலாறு மாதிரியான குப்பைங்க ஓடும் பொழுது இது ஏன் ஒடலை அப்படின்னு தெரியலை. ஆனால் கிளைமாக்ஸ் ரொம்ப ஓவரா போயிடிச்சி அதை கொஞ்சம் யதார்த்தமா எடுத்து இருக்கலாம்.
வணக்கம் சந்தோஷ்,
வருகைக்கு நன்றி. க்ளைமாக்ஸ் ஓவர்தான் என்றாலும், என்ன பண்றது, படம் ஓடனுமே. சில இடங்கள்ல காம்ப்ரமைஸ் பண்ணித்தான் ஆகனும். இல்லையென்றால் பிரச்சாரப் படம் போல ஆகிவிடுமே.
Post a Comment