1. முதல் படி
அப்பாடா! நானும் ஒரு வழியா கிறுக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா தடவி தடவி தமிழ்ல டைப் பண்றதுக்குள்ள தாவு தீந்து போகுது. என்ன பண்றது, நானும் வெட்டியாதான் இருக்கேன்கிறத இப்பிடியெல்லாம் காட்ட வேண்டி இருக்கு.
பெயர் காரணம்:
சொந்த பேர்ல 'ப்ளாக்க'லாம்னா ஏற்கனவே பதிவு பண்ணிட்டாங்க. வேற என்ன பேர்ல ஆரம்பிக்கலாம்னு நான் உக்காந்து யோசிச்சா 'நான்' தவிற வேற ஒன்னும் தோணல.
என்னைப் பற்றி:
தற்போது சென்னையில் ஆராய்ச்சி மாணவன்.
இத டைப் பண்றதுக்குள்ளயே கண்ண கட்டுதே, இன்னைக்கு இது போதும்.
வணக்கம்.
5 comments:
Welcome to bloggers world :-)
//தடவி தடவி தமிழ்ல டைப் பண்றதுக்குள்ள தாவு தீந்து போகுது//
தமிழ்த் தட்டச்சுக்கு என்ன செயலி உபயோகிக்கிறீங்க?
வணக்கம் சேதுக்கரசி,
தற்பொழுது http://www.suratha.com/leader.htm என்ற இணைய தளத்தில் சென்று தட்டச்சு செய்து உபயோகிக்கிறேன். உங்களின் ஆலோசனைகளை எனக்கு கூறினால் உதவும். நன்றி.
http://www.ezilnila.com/software.htm
இந்தப் பக்கத்திலிருந்து எ-கலப்பை 2.0 தரவிறக்கம் செய்து நிறுவவும்.
Start | Programs | Tavultesoft Keyman for Thamizha! | Keyman
சென்று எ-கலப்பையைச் செயல்படுத்தவும்.
யுனிகோடில் எழுத Alt+2 யுனிகோடு தெரிவு செய்யவும்.
வணக்கம் சேதுக்கரசி,
தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
Post a Comment