14 February, 2007

16. நான் ஏன் ஆராய்ச்சி மாணவன் ஆனேன்?

மிக முக்கிய 8 காரணங்கள்

1. எனக்கு தூக்கத்த, தூங்குறது பிடிக்கல.

2. என் வாழ்க்கைய போதும் போதுங்கிற அளவுக்கு எஞ்சாய் அதான் அனுபவிச்சிட்டேன்னு நெனக்கிறேன்.

3. மனசுல டென்சனே இல்லாம வாழ்றதெல்லாம் ஒரு வாழ்க்கையா (நாங்கெல்லாம் பிரச்சினைய போர்வையா போத்திக்கிட்டு தூங்குறவய்ங்க).

4. அப்பப்ப பண்ண பாவம், கருமாந்திரத்துக்கெல்லாம் பரிகாரம் பண்ணனும்னு நெனக்கிறேன்.

5. கீதை சொல்றத பாலோ பண்றேன் 'கடமய செய்யி, பலன எதிர்பாக்காத'.

6. வாழ்க்கையில நாம் செய்யிற ஒவ்வொண்னுத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கும், ஆனா அது என் வேலையில தப்புண்னு காட்டப்போறேன்.

7. என் குடும்பத்து மேல இருக்கிற கோவத்தையெல்லாம் பழி தீர்த்துக்கப் போறேன்.

8. எனக்கும், என் பாசக்கார பயபுள்ளைகளாகிய நண்பர்களுக்கும் இடையில ஒரு பிரிவு வேணும்னு நெனக்கிறேன்.


நண்பர்களே, இதெல்லாம் நான் எழுதலீங்க. என்னிய மாதிரியே ஆராய்ச்சி மாணவனா இருந்து வாழ்க்கைய வெறுத்த ஒரு பாசக்கார பயபுள்ள நொந்து போயி குறுஞ்சேவை தகவல்ல அனுப்புனது. இதேமாரி புண்பட்ட நெஞ்சங்கள் யாராவது இருக்கீங்களாப்பா?

11 comments:

MyFriend said...

அட.. கொஞ்ச நேரத்துல இவருக்கு என்னமோ ஆயிடுச்சுன்னுல நினைச்சேன்!!! :-P

முத்து-Muthu-ムットゥ said...

I quit my job and joined as a research student, me too have similar feeling..

முத்து-Muthu-ムットゥ said...

me too have similar feeling. But i am a new student..:)

ஷோபன் said...

என் இனிய தோழி,

வாங்க வணக்கம். நீங்க என்னோட போன பதிவுல 'பதிவு போட்டு 1 1/2 மாசம் ஆச்சு'னு சொல்லீட்டீங்களா, சிங்கம் கெளம்பியிருச்சு. அதுனால தான் இந்த பதிவே.

//அட.. கொஞ்ச நேரத்துல இவருக்கு என்னமோ ஆயிடுச்சுன்னுல நினைச்சேன்!!! :-P//

என்னங்க தோழி என்னிய லூசுனு நெனசிட்டீங்களா :-) அட கிட்டத்தட்ட அப்பிடிதான். ஏன்டா ஆராய்ச்சி பண்ண வந்தோம்னு இருக்கு. என்ன பண்றது.

ஷோபன் said...

வாங்க முத்து,

வருகைக்கு வணக்கம். என்ன பண்றீங்க, எங்க மாட்டுனீங்க?

//me too have similar feeling. But i am a new student..:)//
இப்பதான ஆரம்பிச்சிருக்கீங்க, போக போக நீங்களும் ஞானியாயிடுவீங்க :-)

சுந்தர் / Sundar said...

//நாங்கெல்லாம் பிரச்சினைய போர்வையா போத்திக்கிட்டு தூங்குறவய்ங்க //

இந்த மனதிடம் இருந்தா போதும்
இதுதான் வாழ்க்கைனு வாழ்ந்திடலாம் !

ஷோபன் said...

வாங்க சுந்தர்,
என்னங்க ரொம்ப நாளா ஆள காணோம்?

//இந்த மனதிடம் இருந்தா போதும்
இதுதான் வாழ்க்கைனு வாழ்ந்திடலாம் ! //

ரொம்ப நல்லா சொன்னீங்க. இப்பிடிதாங்க வாழ்க்கை ஓடுது.

சேதுக்கரசி said...

//இதேமாரி புண்பட்ட நெஞ்சங்கள் யாராவது இருக்கீங்களாப்பா?//

முனைவர் படிப்பா? நான் அந்தத் தப்பெல்லாம் பண்றதில்ல :-)

ஷோபன் said...

வாங்க சேதுக்கரசி,

என்னோட முதல் பதிவுல முதல் பின்னூட்டம் போட்டு வாழ்த்திட்டு அதுக்கப்புறம் இப்பதான் வந்திருக்கீங்க. மறக்காம வந்ததுக்கு நன்றி.

//முனைவர் படிப்பா? நான் அந்தத் தப்பெல்லாம் பண்றதில்ல :-) //

தப்பிச்சீங்க போங்க :-)

வெற்றி said...

நான்,
/* (நாங்கெல்லாம் பிரச்சினைய போர்வையா போத்திக்கிட்டு தூங்குறவய்ங்க).*/

நல்ல மன உறுதி. வாழ்க்கைக்கு மிகவும் தேவையானது. தமிழ்வேதமும் இதைத் தானே சொல்கிறது.

"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்"

ஷோபன் said...

வாருங்கள் வெற்றி,

வருகைக்கு நன்றி.

//"இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்" //

ரொம்ப சரியாச் சொன்னீங்க ))