10. சற்றே பெரிய பின்னூட்டம் to செந்தழல் ரவி
இது செந்தழல் ரவியின் பதிவுக்கு என்னுடைய சற்றே பெரிய பின்னூட்டம். ரவியின் பதிவுக்கு கீழே க்ளிக்குக.
http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_07.html
ரவி அண்ணே,
அபத்தத்திலிலேயே பெரிய அபத்தம் தமிழ் சினிமாவில இருக்கிற அபத்தத்தை லிஸ்ட் பண்ண சொன்னதுதான், இதுக்கெல்லாம் ஒரு பின்னூட்டம் பத்தாது, தனி வலைப்பூ ஆரம்பிச்சு தினம் ஒரு பதிவு போடலாம். இருந்தாலும் உங்களுக்காகவும், தமிழ் கூறும் நல்லுலகத்திற்காகவும்...
1. வில்லன் கெலிகாப்டர்ல போனாலும், இவரு வில்லன துரத்திக்கிட்டே ஓடிப்போயித்தான் பிடிப்பாராம், யாரு நம்ம ஈரோவாகப்பட்டவர் தான்.
2. வில்லன் முன்னாடி ஜீப்லயோ, வேன்லயோ ஈரோயினாகப் பட்டவளையோ, அம்மாவயோ கடத்திக்கிட்டு போவாராம், இவரு பின்னாடியே ஓடும் போது, ஒரு புண்ணியவான் இவருக்காகவே புல்லட் நிறைய பெட்ரோல் போட்டு, சாவியோட மரத்தடில வச்சிட்டு உச்சா போயிக்கிட்டே இருப்பாரு, இவரு நோகாம எடுத்துக்கிட்டு போவாராம். (ஏண்டா டேய்! உங்களுக்கெல்லாம் வண்டியில பெட்ரோலே தீராதா, டிராபிக் போலீஸ் பிடிச்சு லைசன்ஸ், ஆர்.சி. புக் செக் பண்ண மாட்டாங்களா).
3. அட இது கூட பரவாயில்ல, இவரு பைக்ல வேகமா போறாராம், அப்பிடியே குனிஞ்சுக்கிட்டு....உர்ர்ர்ர்னு ஆக்ஸிலேட்டரை முறுக்குவாரு (ஏதோ பெரிசா ஏரோபாயில் ஷேப்ப கிரியேட் பண்ணி ஓட்டுரதா நெனப்பு).
4. இதுவும் போன பாயின்ட்டோட சேந்ததுதேன். இவரு வேகமா போறத காட்டுறதுக்கு, அடிக்கடி கியர் மாத்துரதை காமிப்பாங்கெ. (ஏண்டா! நல்லா வேகமா போற வண்டில எதுக்குடா கியர நோண்டிட்டிருக்க). டாப் ஸ்பீடுல போறார்ங்கிறதை ஸ்பீடாமீட்டர வேற க்ளோசப்ல காட்டுவாங்கெ. அப்பப்பாத்து ஒரு கண்டெயினர் லாரி கரெக்ட்டா குறுக்கால போகும், நல்லா கெளப்புராங்கப்பா பீதிய.
5. ஓகே, இனி சென்டிமெண்ட்ஸ். ஆசுபத்திரி ஆபரேசன் தியேட்டர் வாசல்ல குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துக்கிட்டு இருப்பாங்க, பெருசா கண்ணாடி போட்ட டாக்டர் வந்து கண்ணாடிய மெதுவா கழட்டிக்கிட்டே "சாரி! நாங்க எவ்வளவோ....." (ஆமா கண்ணாடி போடாத டாக்டர் எத கழட்டிக்கிட்டே சொல்லுவாரு).
6. ஆக்ஸிடன்ட்லயோ, எதுலயோ மாட்டின ஒருத்தன தூக்கிக்கிட்டு ஆசுபத்திரிக்கு கொண்டு போனா கண்டிப்பா இந்த ரெண்டுல ஒரு டயலாக் தான்..
a. ஒரு அரைமணி நேரம் லேட்டாயிருந்தாக் கூட எங்களால காப்பாத்தியிருக்க முடியாது.
b. ஒரு ஒன் அவர் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கன்னா...(டேய் ஆக்ஸிடென்டே கால் மணி நேரத்துக்கு முன்னாடிதான்டா ஆச்சு).
7. அவசரமா ரத்தம் சொட்டச் சொட்ட ஸ்டெரச்சர்ல வச்சு, ஆப்பரேசன் தியேட்டருக்கு கொண்டு போவாங்க, ஒரு நர்ஸ் வந்து "எல்லாரும் வெளிய இருங்க"னு சொல்றதக்கூட கேக்காம ஈரோவோ, ஈரோயினியோ உள்ள போக டிரை பண்ணுவாங்க, என்னமோ அவிங்களே போயி ஆப்புரேசன் பண்ணப்போறது மாதிரி.
8. ஈரோயினி ஈரோவப் பாத்து ஒன்னுந்தெரியாத பட்டிக்காட்டான்னு சொன்ன பிறகுதான் ஈரோ அவரோட ரெபிடெக்ஸ் ஆங்கில புலமையை கால் மணி நேரத்துக்கு தம் கட்டி பேசிக்காட்டுவாரு. அதுவும் இங்கிலிபீசுல பேசிட்டா புத்திசாலியாம், ஏன்... ரிலேட்டிவிட்டி தியரிய விளக்குறது.
9. ஈரோ 'தண்ணி'யடிச்சா அவரு சோகத்துல இருக்காராம், வேற யாராவது தண்ணியடிச்சா "ச்சீ...பொறுக்கி நாயி"னு ஈரோயினி திட்டுவாங்க.
10. ஈரோயின் மேல ஈரோ தெரியாம மோதிட்டா " நீயெல்லாம் அக்கா, தங்கச்சி கூட பொறக்கல"னு கண்ணகியோட கசின் சிஸ்டர் மாதிரி கேப்பாங்க. ஆனா ஈரோ மேல ஈரோயினி தெரிஞ்சே மோதினாலும் " நீயெல்லாம் அண்ணன், தம்பி கூட பொறக்கல"னு கேக்கமாட்டாரு.
11. பொண்ணுண்னா அடக்கமா இருக்கனும், அமைதியா இருக்கனும்னு சொல்லி முடிச்ச அடுத்த சீன்லயே இம்மினிக்கூண்டு டிரஸ் போட்ட ஈரோயினி கிட்ட போயி 'வருவியா...வரமாட்டியா'னு கெஞ்சிக் கூத்தாடி குத்து டான்ஸ் போட்டுக்கிட்டு இருப்பாரு.
12. ஈரோவுக்கு ஒலகத்துல தெரியாத விசயமே கிடையாது, எல்லா இசைக்கருவிகளையும் வாசிப்பாரு, எல்லாவிதமான வண்டிகளையும் ஓட்டுவாரு, டைம்பாம்ல கரெக்ட்டா வயர கட் பண்ணுவாரு, வீட்ல அம்மாக்கு சமையல்ல உதவுவாரு, துப்பாக்கி சுடுவாரு, கத்தி சுத்துவாரு, வர்மக்கலைல இருந்து டேக் ஒன் வரைக்கும் தெரியும், தீவிரவாதிகளை கண்டுபிடிக்க அரசாங்கமே இவரதான் கெஞ்சி கேக்கும், ஊருக்கே அறிவுரை சொல்றேங்கிற பேர்ல மொக்கயப் போடுவாரு, ஒண்ணுந்தெரியாத கிராமத்து மக்கள் முன்னாடி, கலெக்டர்கிட்டயோ இல்ல திமிர் பிடிச்ச ஈரோயின் முன்னாடியோ தன்னோட ஆறு வருசம் அரியர் வச்சு முடிச்ச இங்கிலிபீசு அறிவ காட்டுவாரு......................................................ஆனா அவங்கம்மாவ வில்லன் எப்ப கடத்துவான்னு தெரியாது. வில்லன் கடத்த வரும்போது இவுரு தனியா தேமேன்னு யாருமே இல்லாத கடையில ஷாப்பிங் பண்ணிக்கிட்டிருப்பாரு.
அடப் போங்கப்பா, இதெல்லாம் ஒரு நாள்ல எழுதி முடிக்கிற காரியமா? இத எழுதுறதுக்கு பதிலா ராமஜெயம் எழுதியிருந்தாக் கூட புண்ணியம் கெடச்சிருக்கும்.
இதையெல்லாம் விட பெரிய அபத்தம் கீழே. தயவு செய்து இளகிய மனம் கொண்டவர்கள் இதற்கு மேலே செல்ல வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அதுக்கு மேல ஒங்க இஸ்டம்....
...
...
...
...
இடுக்கண் வருங்கால் நகுக....வேறென்ன பண்றது.
11 comments:
//ஒரு ஒன் அவர் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கன்னா...(டேய் ஆக்ஸிடென்டே கால் மணி நேரத்துக்கு முன்னாடிதான்டா ஆச்சு).//
அல்டிமேட்!!!இதுக்காகவே உங்களுக்கு பரிசு குடுக்கனுங்க..
வணக்கம் மணிப்பயல் அவர்களே, வருகைக்கு நன்றி.
Ultimate...too good:-)
Malli.
வணக்கம் மல்லி, நன்றி.
//கண்ணகியோட கசின் சிஸ்டர் மாதிரி கேப்பாங்க.//
என்னோட ஓட்டு இதுக்குத்தான்.
வணக்கம் ஜி, ரொம்ப நன்றிங்க.
//வாளும் வேலும் என் இரு கண்கள்! போர்க்களம் என்பது இந்த ஜி-யின் பொழுதுபோக்கு! உறைந்த ரத்தம் நான் உறுஞ்சும் வாசம்! உருண்டோடும் தலைகள் நான் எட்டி விளையாடும் பந்துகள்!//
உங்க அறிமுகமே அட்டகாசம் :-)
கலக்கலா இருக்கு...நடுவர் குழு பாத்துக்கிட்டிருக்கு உங்கள் பதிவையும்...இன்னும் ஒரு மணி நேரத்தில் முடிவு...
***** தனிமடல் *********
பரிசு என்னா தெரியுமா ? பத்தாயிரம் மதிப்புள்ள எல்.ஜி மொபைல் ஹி ஹி
யாருக்கும் சொல்லாதீங்க...பார்ப்போம் நடுவர் குழு உங்களை தேர்ந்தெடுக்குதான்னு...காரணம் நடுவர் குழு பிலாக் என்றால் என்னான்னு தெரியாதவங்களாக்கும்..
வணக்கம் ரவிண்ணே,
மிக்க நன்றி.
//நடுவர் குழு பிலாக் என்றால் என்னான்னு தெரியாதவங்களாக்கும்.. //
ஓகோ இது வேறயா...என்னமோ போங்க. எப்பிடியோ சீக்கிரம் ஒரு முடிவ சொல்லுங்கப்பா...பெரிய அபத்தம் என்னான்னு தெரிஞ்சுக்க காத்துக்கிட்டு இருக்கேன்.
எந்தளவுக்கு வெறுத்து போயிருக்கீங்கன்னு பதிவ படிச்சாவே தெரியுது:))
கடேசில வெச்சிங்களே மொளகா வெடி! அதுதான் டாப்.
வணக்கம் தம்பி,
வருகைக்கு நன்றி. உங்களுக்கும் மொளகா பிடிக்காதா :-)
Post a Comment