15. அனுவின்றி ஓர் அணுவும்
ஒரு முக்கியமான டிஸ்கி:
ஒரே உச்சரிப்பைக் கொண்டிருக்கும் வேறு வேறு வார்த்தைகளைப் பற்றி யோசித்து கொண்டிருக்கும் போது தோன்றியது இது.
ஒருவேளை எனக்கு ஒரு காதலி இருந்து அவளுக்கு அனு என்று பெயரும் இருந்தால்...எப்படி என் லாவகமான சிந்தனை :-)
------------------------------------------------------------
அவனின்றி
ஓர் அணுவும்
அசையாது
அது சரி
ஆனால் எனக்கு
அனுவின்றி
ஓர் அணுவும்
அசையாதே.
-----------------------------------------
அனு ஒருமுறை
என்னிடம் கேட்டாள்
"நான் குண்டானா
உனக்குப் பிடிக்குமா?"
நான் சொன்னேன்
"அய்யோ வன்முறை
வேண்டாம், எனக்கு
அனுகுண்டுனா பயம்".
அப்போது வெடித்துக்
கிளம்பிய சிரிப்பில்
சிதறிப் போனவன்தான்
நான்.
---------------------------------------
அணுக்களால் ஆனது
உலகம் - இது அறிவியல்
அனுவால் ஆனது
நான் - இது காதல்
---------------------------------------
அணுக்கதிர் வீச்சிலிருந்து
கூட தப்பிவிடலாம்
ஆனால் அனு-கண்
வீச்சிலிருந்து...
--------------------------------------
"அணு அறிவியல்
தெரியுமா உனக்கு?"
என்றாய் நீ.
"அனு அறிவியல்
தான் தெரியும்"
என்றேன் நான்.
வெட்கத்தில்
சிரித்தாய் நீ.
அப்போது என்மனதில்
நிகழ்ந்தது தான்
அனுக்கரு சிதைவு.
----------------------------------------
எலெக்ட்ரான்கள் எல்லாம்
அணுக்கருவைச் சுற்றிச்
சுற்றி வருமாம்
நான் அனுவை
சுற்றிச் சுற்றி
வருவதைப் போல.
---------------------------------------
14 comments:
'அனு'பவிச்சு எழுதிருக்கிறீங்க....
vanakam,
ungal kavithai arumai... enakum anu vindri oer anuvun asaiadhu.. enna en amma peru anu...
valthukal
barathi
வாங்க K4K,
எழுதுறது ஒன்னாம் வாய்ப்பாடா இருந்தாலும் அனுபவிச்சு தான எழுதனும், என்ன சொல்றீங்க...:-)
வாங்க பாரதி,
பாராட்டுக்களுக்கு நன்றி. உங்க அம்மாவின் பெயர் அனுவா? உங்கள மாதிரி அம்மா மேல பாசமா இருக்குற பசங்கள பாத்தா எனக்கு ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி, அடிக்கடி வாங்க.
//ஒன்னாம் வாய்ப்பாடா இருந்தாலும் அனுபவிச்சு தான எழுதனும்//
ரொம்பச் சரி!!
அனு அனு-ன்னு எழுதியிருகீங்க.. மத்தவங்க இதை படிப்பாங்க ரசிப்பாங்க.. ஆனால், நான் ரசிச்சு சந்தோஷப்பட்டதுக்கு அளவே இல்லை. ஏன் தெரியுமா?
அனு அனு-ன்னு எழுதியிருகீங்க.. மத்தவங்க இதை படிப்பாங்க ரசிப்பாங்க.. ஆனால், நான் ரசிச்சு சந்தோஷப்பட்டதுக்கு அளவே இல்லை. ஏன் தெரியுமா?
இந்த பின்னூட்டம் எழுதும்போது, உங்களுடைய இந்த பதிவு என் கையில் பி.டி.எஃப் வடிவமாக.. ;-)
எனக்கு இது ப்டித்ததுக்கு காரணம் நான் அனு. ;-)
என் இனிய தோழி,
முதலில் ஒரு தேங்ஸ் அப்புறம் ஒரு சாரி. பதிவப் படிச்சிட்டு சந்தோஷப்பட்டதுக்கு தேங்ஸ், உடனே அதுக்கு பதில் போட முடியாததுக்கு சாரி. ஒரு நாளு நாளா வைரல் காய்ச்சல், அதான் ஒன்னுமே பண்ண முடியல.
//ஆனால், நான் ரசிச்சு சந்தோஷப்பட்டதுக்கு அளவே இல்லை. ஏன் தெரியுமா? //
ரசிச்சு சந்தோஷப்பட்டதுக்கு நன்றி, ஆனா ஏனுங்க தோழி?
//எனக்கு இது பிடித்ததுக்கு காரணம் நான் அனு. ;-) //
அப்பிடின்னா.... உங்க பேரு அனுங்களா? புரியவில்லை தோழி.
// உடனே அதுக்கு பதில் போட முடியாததுக்கு சாரி. //
பரவாயில்லைங்க.. நானே உங்களுக்கு பதிலை இப்போதுதானே போடுகிறேன்..
இப்போ காய்ச்சல் எதுவும் இல்லையே? are you fine now?
//அப்பிடின்னா.... உங்க பேரு அனுங்களா? புரியவில்லை தோழி. //
ஆமாங்க.. என்னுடைய முழுப்பெயர் அனு்ராதா. நீங்க மை ஃபிரண்ட்-ன்னே கூப்பிடலாம்.. இதுதான் வலையுலகில் என்னை அறிந்தவர்கள் கூப்பிடுவது.. ;-)
என் இனிய தோழி,
இப்பொழுது பரவாயில்லை, தேறிவிட்டேன். நன்றி.
1 1/2 மாதங்கள் ஆச்சு! புதுசா ஏதாவது எழுதுங்கள்.. ;-)
Anuvum anuvum onru sernthal
ekka chakka kummalam umakku
Anuvai anu anuvaai anubavithu rasithen nan
Ungaludaya karpanai kavithai anu(bavam)
melum valarga!!
Nanri..Vazhthukkal Araichiyalare
- Kannambuchi
வாங்க கண்ணாம்பூச்சி,
//Anuvai anu anuvaai anubavithu rasithen nan//
அனுவை அணு அணுவாய் ரசித்தீர்களா, நன்றி. சாரிங்க பதில் போடுவதற்கு லேட் ஆயிடிச்சு. அடிக்கடி வாங்க.
Post a Comment