13. இது கதையல்ல கதை
சென்ற ஞாயிற்றுக்கிழமை கார்ட்டூன் சேனல் பார்த்துக் கொண்டிருந்த போது கண நேரத்தில் உருவானது இந்த கதையின் கரு.
-------------------------------------------------------------------------
இது கதையல்ல கதை
ஒரு நாள் என் நண்பன் சரவணன் ரொம்ப அவசரமா என் இன்னொரு நண்பன் ரவிய தேடி வந்தான். அப்ப நானும் ரவியும் அவன் வீட்டு மாடில ஒக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். சரவணன் ஒரு டைரக்டர்கிட்ட அசிஸ்டண்டா வேலை செய்றான். அதாவது உதவி இயக்குனர்.
"வாடா சரவணா! என்னடா ரொம்ப நாளா ஆளையே காணோம்?".
"இல்ல மச்சான்! வேலை ரொம்ப அதிகமாயிருச்சு, புது இடம், புது டைரக்டரு, வேலை பெண்டெடுக்குறாங்கடா".
"என்ன கொடுமை சரவணன் இது".
"டேய், எனக்கேவா?".
"அப்புறம் சொல்லு மச்சி, என்ன விசேசம்? என்னங்கிறாங்கெ உங்க சினிமா மக்கள்?"
" நான் வந்ததே வேற ஒரு விசயமா. எனக்கு நீதான்டா ரவி ஒரு உதவி பண்ணனும்".
"சொல்டா என்ன வேணும்?"
"டேய் எனக்கு ஒரு கதை வேணுன்டா..."
"என்னாது கதையா?" ரவி அதிர்ச்சியா சரவணன பார்க்க, நான் ஒன்னுமே புரியாம அவிங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.
"ஆமாடா ரவி. உனக்கே தெரியும், ரொம்ப நாள் நாயா பேயா அலைஞ்சு இப்பதான் இந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. நான் வேற புதுசா, எழவு எல்லா வேலையயும் என் தலையில கட்டிர்ராங்க. டீ வாங்கி குடுக்கிறதுல ஆரம்பிச்சு எல்லா வேலையும் நாந்தேன் பண்ணனும்".
"ம்ம்....அதுக்கு?".
"டைரக்டரு புது படம் ஆரம்பிச்சிட்டாரு. நாளைக்கு சூட்டிங் போறோம். அதுக்குள்ள அவரு எதிர் பாக்கிற மாதிரி ஒரு கதை வேணுமான்டா. நீதாண்டா ஏற்பாடு பண்ணனும்".
"டேய் என்னாடா, பஸ்ல ஏறி தி. நகருக்கு ஒரு டிக்கெட் வேணுன்னு சொல்ற மாதிரி சொல்ற, கதைக்கு நான் எங்கடா போவேன்" கடுப்பான ரவி மேலும் "டேய் எனக்கு தெரிஞ்சதெல்லாம் பாட்டி வடை சுட்ட கதைதான், ஏண்டா உனக்கு ஏதும் தெரியுமாடா?" என்று என்னை பார்த்து கேட்டான்.
"டேய் என்னதான்டா பேசிக்கிறீங்க, எனக்கு ஒன்னுமே புரியலயே, இப்பவே கண்ண கட்டுதேடா."
ரவியும் நானும் கடுப்பு ப்ளஸ் புரியாமல் சரவணணைப் பார்க்க, அவன் அதை விட குழப்பமா எங்களை பார்த்தான்.
ரவி, "ஏண்டா இப்பிடிதான் ரொம்ப நாளா படம் எடுக்குறாங்களா, ஏண்டா சூட்டிங் போன பிறகுதான் கதை என்னான்னு உக்காந்து யோசிப்பாங்கெளா, வெளங்கிரும்டா தமிழ் சினிமா".
"டேய் டேய், என்னாடா பேசுறீங்க, ஏண்டா கதை கூட இல்லாமயாடா சூட்டிங்க்குக்கு போவோம். நான் சொல்றது கதை இல்லடா...கதை".
"என்னாது கதையில்ல ஆனா கதையா. டேய் நேத்து வரைக்கும் நல்லாத்தானடா இருந்த. என்னடா ஆச்சு?", இது ரவி.
"அய்யய்யய்ய! வெண்ணைகளா!! கதைடா கதை...க...தை...பழைய சாமி படங்கள்ல எல்லாம் வச்சிருப்பாங்களே, அட மகாபாரதத்துல பீமன் தோள்ள சாச்சு வச்சிருப்பாரே, அட அனுமார் கூட கைல வச்சிருப்பாருல்லடா. கதைடா கதை".
"ஓ! அந்த கதையா. ஏண்டா சொல்லவேயில்ல....என்னாதிது சின்னப்புள்ளத்தனமா இருக்கு...ராஸ்கல்".
"டேய் ரவி! உங்க மாமா ஒருத்தரு சினிமாவுக்கான கலைப் பொருட்கள் எல்லாம் வாடகைக்கு விடுற கடை வச்சிருக்காருதான. அதான் உன் மூலமா கதை வாங்கலாம்னு...."
"அடப்பாவி, நல்லா கெளப்புராங்கையா பீதிய!......."
10 comments:
இந்த கதை படிச்சிட்டு ஒரு 5 நிமிஷம் தனியா சிரிச்சேன். என்ன பாத்து சுத்தி இருக்கறவங்க என்ன நெனச்சிருப்பாங்கலோ !!!!
நல்ல கதை!! :)
வாங்க ஸ்ருதி,
முதல் முறையா வந்திருக்கீங்க வணக்கம். சிரிச்சதுக்கு நன்றி. சிரிக்கனும்னு தோனிச்சினா சிரிச்சிர வேண்டியதுதான், இதுக்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் பார்க்கப்படாது. என்ன நான் சொல்றது?
வாங்க CVR,
ரொம்ப நன்றிங்க. அடிக்கடி வாங்க, உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க.
தலைப்புக்கு -- 60 மார்க்
கதைக்கு -- 40 மார்க்
100/100
வாங்க சுந்தர்,
மொத மொதல்ல 100/100 பார்க்கிறேன். ரொம்ப டேங்ஸ்ங்க. நீங்க வாத்தியாரா? :-)
முதல் தடவை படிக்கும்போது என்னன்னு புரியவில்லை..
திரும்பவும் ஒரு தடவை படித்துதான் புரிந்து கொண்டேன். தலைப்பு சூப்பர்.
vanakm nan..
romba nala kadhai... manikavum, kathai ithu.... thniya sirkaratha pathu en nanbargalum sirikaranga..
nala nagaichuvai unarvu..
payanam thodaratummmm
வணக்கம் என் தோழி,
//முதல் தடவை படிக்கும்போது என்னன்னு புரியவில்லை..//
அடடா! இன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாமோ?
//தலைப்பு சூப்பர்//
ரொம்ப நன்றிங்க தோழி!.
வாங்க பாரதி,
//thniya sirkaratha pathu en nanbargalum sirikaranga..//
நண்பர்களையும் சேர்த்துக்கிட்டு சிரிக்க வேண்டியதுதான. எப்பிடியோ சிரிச்சதுக்கு நன்றி. :-)
Post a Comment